திராவிடர் கழக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் திராவிடர் கழக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் திராவிடர் கழக இளைஞர் அணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பெரியார் செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன், கோபி, ஜீவன்தாமஸ், தீனதயாளன், சூரியக்குமார், ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பகுத்தறிவு கழக தலைவர் புகழேந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்.
வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், வங்கி பணிகளில் தமிழக இளைஞர்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
இதில் ராமு, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story