டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை


டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை
x

மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

கத்திக்குத்து

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி மேற்கு பகுதியை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகன் அருள் (வயது 38). டிரைவர். அதே ஊரை சேர்ந்தவர் செல்வம் மகன் ஆறுமுகம் (40). இவர்கள் இருவரும் உறவினர்கள். நேற்று இரவு அருள், ஆறுமுகம் இருவரும் கீரமங்கலம் சந்தைப்பேட்டை அருகே கடைவீதியில் நின்று மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதத்தால் ஏற்பட்ட தகராறில் அருள், ஆறுமுகத்தை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருளின் உடலில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.

டிரைவர் சாவு

இதில் படுகாயமடைந்த அருளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அருள் பரிதாபமாக இறந்தார். அருள் தாக்கியதில் கையில் காயமடைந்த நிலையில் நின்ற ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீரமங்கலத்தில் மது போதையில் டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story