'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சென்னை,
போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
மேலும் போதைப் பொருட்ளுக்கு எதிரான உறுதிமொழி இன்று காலை 10.30 மணிக்கு அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் ஏடுக்க உள்ளனர்.
Related Tags :
Next Story