இடி, மின்னலுடன் பலத்த மழையால் சென்னையில் தரை இறங்க முடியாமல் 5 விமானங்கள் வானில் வட்டமிட்டன


இடி, மின்னலுடன் பலத்த மழையால் சென்னையில் தரை இறங்க முடியாமல் 5 விமானங்கள் வானில் வட்டமிட்டன
x

சென்னையில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னை விமான நிலைய பகுதியில் இடி, மின்னல் அதிக அளவில் இருந்ததால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டு இருந்தன.

அதன்படி ஐதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த விமானம், தூத்துக்குடியில் இருந்து 70 பயணிகளுடன் வந்த விமானம், ஜோத்பூரில் இருந்து 124 பயணிகளுடன் வந்த விமானம், துர்காப்பூரில் இருந்து 154 பயணிகளுடன் வந்த விமானம் என 5 விமானங்களும் பலத்த மழையால் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன. வானிலை சீரானதும் சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு 5 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. இதேபோல் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களான கோவை, சீரடி, கோவா உள்ளிட்ட விமானங்களும் அரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.


Next Story