மின் கணக்கீட்டு முறை: புகார்கள் எழாத வகையில் கணக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்


மின் கணக்கீட்டு முறை: புகார்கள் எழாத வகையில் கணக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 May 2023 12:38 PM GMT (Updated: 25 May 2023 12:45 PM GMT)

மின் கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கள ஆய்வு மேற்கொள்ளும் மின்வாரிய அலுவலர்கள் கணக்கீட்டின் சரியான முறையை சோதனை மின் அளவீடு மூலம் உறுதி செய்ய வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் மின் கணக்கீட்டு முறையில் புகார்கள் எழாத வகையில் கணக்கீட்டை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மின் கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக தன்னிச்சையாக, உண்மைக்கு மாறான கணக்கீட்டை கணிணியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில் குறைந்தபட்சம் 10 சதவீத மின் இணைப்புகளை தேர்ந்தெடுத்து சோதனை மின் அளவீடுகளை எடுப்பதன் மூலம் மின் கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story