எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 12:51 PM IST (Updated: 27 July 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாடு தொடர்பான பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மாநாட்டுக்காக, ஒருங்கிணைப்புக் குழு, விழா மலர்க் குழு, கூட்ட அரங்கு அமைப்புக் குழு, விளம்பரம், செய்தித் தொடர்பு மற்றும் நிகழ்ச்சி நிரல் ஒருங்கிணைப்புக் குழு என 9 குழுக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருந்த நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


Next Story