எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: அ.தி.மு.க.வினர் ஆன்மிக பயணம்


எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: அ.தி.மு.க.வினர் ஆன்மிக பயணம்
x

கோப்புப்படம்

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கிடைத்ததையொட்டி அ.தி.மு.க.வினர் ஆன்மிக பயணம் தொடங்கினர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையொட்டி, கர்நாடகாவில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு அ.தி.மு.க.வினர் நேர்த்திக்கடன் செலுத்த பயணம் மேற்கொண்டனர். எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் இணைச்செயலாளர் டாக்டர் வி.சுனில் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் காவடி மற்றும் முடி காணிக்கை வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நேற்று தங்களின் ஆன்மிக பயணத்தை தொடங்கினர்.

இந்த ஆன்மிக பயணத்தை அண்ணா தொழிற்சங்கம் பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

1 More update

Next Story