மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு...
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
அதன்படி துணைத்தலைவர்கள் ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் குழுவில் உள்ளனர்.
தேர்தல் செயல் திட்டங்கள் உருவாக்கவும், பிற குழுக்களை அமைக்கவும் ஒழுங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story