வனத்துறையினருக்கு மின்சார இருசக்கர வாகனங்கள்


வனத்துறையினருக்கு மின்சார இருசக்கர வாகனங்கள்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 11:42 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் பணிபுரியும் வனத்துறையினருக்கு மின்சார இருசக்கர வாகனங்களை மாவட்ட வன அலுவலர் வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ்நாடு வனத்துறை சார்பில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கும்பொருட்டு நாற்றங்கால் உற்பத்தி, நடவுப்பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடவு குறித்து விழப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விழுப்புரம் வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி வனப்பகுதியில் பணிபுரியும் வனவர்கள், வனக்காப்பாளர்களுக்கு 15 எண்ணிக்கையிலான மின்சார இருசக்கர வாகனங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பேட்டரியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களை இயக்குதல், பராமரிப்பு மற்றும் சார்ஜ் செய்வது குறித்த அடிப்படை பயிற்சிகள் வனப்பணியாளர்களுக்கு விழுப்புரம் மாவட்ட வன அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story