மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய கணக்கீட்டு மேற்பார்வையாளர் பதவிக்கு தவறாக வெளியிடப்பட்ட மாறுதல் உத்தரவை ரத்து செய்துவிட்டு நியாயமான உத்தரவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். திட்ட துணைத் தலைவர்கள் புருஷோத்தமன், குணசேகர், திட்ட செயலாளர் சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் கன்னியப்பன், வீரமுத்து, முருகானந்தம், அருள், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story