எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. கூடுதல் தகவல்… இது ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம். # தலைநிமிரும்_தமிழ்நாடு. என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story