சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்


சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
x

கோப்புப்படம் 

விமான நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்திற்கு நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை என 2 இ-மெயில்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், "சென்னை விமான நிலையத்தில் 5 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை ஒவ்வொன்றாக வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இது தொடர்பாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விமான நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பியவரை தேடி வருகின்றனர். விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story