விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்


விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 21 March 2024 10:18 AM GMT (Updated: 21 March 2024 10:43 AM GMT)

சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொள்வோம் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ௯ மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story