ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம் - தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு


ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம் - தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு
x

தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை வெளுத்து வாங்கியது.

தூத்துக்குடி,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் ஏரல், ஆத்தூர் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது, மழை நின்று வெள்ளநீர் வடிந்து வருகிறது. ஆனால், பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏரல் வட்டாட்சியர் (தாசில்தார்) கைலாச குமாரசாமி வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யாததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமியை பணியிடமாற்றம் செய்து தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏரலுக்கு புதிய வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story