ஈரோடு இடைத்தேர்தல்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்


ஈரோடு இடைத்தேர்தல்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் 3 நாட்கள் பிரசாரம்
x

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 3 நாட்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 77 வேட்பாளர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 'கை' சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் 3 நாட்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 19, 20, மற்றும் 21 ஆகிய தேதிகள் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story