ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 3-ந் தேதி வேட்புமனு தாக்கல்? - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 3-ந் தேதி வேட்புமனு தாக்கல்? - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
x

3-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம், வேட்பு மனு தாக்கல் எப்போது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, 'வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் முடிவு செய்யப்படும்', என்றார்.

மேலும், 3-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது தொடர்பாக நிருபர்கள் கேட்டதற்கு, 'வாய்ப்பு இருக்கலாம். ஆனால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேதி முடிவு செய்யப்பட்டதும் தகவல் தெரிவிக்கப்படும்', என்றார்.


Next Story