ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை நாளை ரத்து


ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை நாளை ரத்து
x

ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது.

ஈரோடு,

தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே உள்ள ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும். ரெயில் நாளை முழுவதும் ரத்து செய்ய ப்படுகிறது.

இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது. இந்த ரெயிலும் நாளை முழுவதுமாக ரத்து செய்ய ப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story