ஈரோடு: மலை பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு


ஈரோடு: மலை பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
x

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஈரப்பதத்தினால் பர்கூர் மலைப்பாதையில் அங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. மேலும் பழமை வாய்ந்த மரங்கள் வேருடன் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது.

இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.


Next Story