ஈரோடு: அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை
தொடர் கனமழை காரணமாக அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 3,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதே போல் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். குறிப்பாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story