ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு


ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:46 PM GMT)

ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி புகார்

விழுப்புரம்

விழுப்புரம்

திண்டிவனம் தாலுகா அவ்வைநடுக்குப்பத்தை சேர்ந்தவர் இளையமுருகன் (வயது 43). விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

வானூர் தாலுகா சேமங்கலம் மதுரா ராமநாதபுரம் கிராமத்தில் எங்களது குடும்ப பூர்வீக சொந்தமான 1 ஏக்கர் 84 சென்ட் நிலம் உள்ளது. இதில் பாகப்பிரிவினை மூலம் எனக்கு கிடைத்த 92 சென்ட் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் அபகரித்துக்கொண்டு அங்கு தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்காக, விளைநிலங்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் மற்றும் பூமியில் அதிகளவில் ஆழ்துளை போட்டு தண்ணீரை உறிஞ்சி வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அபகரிக்கப்பட்ட அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2 கோடி இருக்கும். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.


Next Story