ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு

ஆட்டோ டிரைவரிடம் பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
திருச்சி
திருச்சி மேல சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ கென்னடி (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று எஸ்.ஆர்.சி. ரோடு போலீஸ் காலனி பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்றார். அப்போது ஒரு வாலிபர் ஆட்டோவை வழிமறித்து ஜான் பிரிட்டோ கென்னடியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 தரும்படி கேட்டார். அவர் தர மறுக்கவே, ஆட்டோவின் முன் பக்க கண்ணாடியை அடித்து உடைத்தார். பின்னர் ஜான் பிரிட்டோ கென்னடியிடம் ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ் சந்திரபோசை(23) கைது செய்தனர்.
Related Tags :
Next Story