குடும்ப அட்டைதாரர்கள் வசதிபடி கைரேகை பதியலாம் - தமிழக அரசு
கைவிரல் ரேகை வைக்கும்போது ஆவணங்கள் எதுவும் கோரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ,
ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது.
ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது.
விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூறக்கூடாது என்று, ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story