மறைமலைநகர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி


மறைமலைநகர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x

மறைமலைநகர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியாகினர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கருநிலம் கிராமத்தில் உள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் கோபாலன் (வயது 60), விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது வயலில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதைபோல மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சாலையை கடக்க முயன்ற சுமார் 28 வயது வாலிபர் மீது அந்த வழியாக வந்த வேன் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story