விவசாய சங்க ஆலோசனை கூட்டம்


விவசாய சங்க ஆலோசனை கூட்டம்
x

விவசாய சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

கரூர்

தோகைமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க ஒன்றிய துணைத்தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட விவசாய சங்க செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் முனியப்பன், ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில், தோகைமலையை மையப்பகுதியாக கொண்டு பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்க வேண்டும், காவிரி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் உபநீரை வாய்க்கால் அல்லது ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், விவசாய சங்கம் சார்பில் மாநாடு நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் சக்திவேல், ஐயர், சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story