கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவர்... தலைமைச் செயலாளர் முன்பு கொடியேற்றினார்


கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவர்... தலைமைச் செயலாளர் முன்பு கொடியேற்றினார்
x

ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று தேசியக்கொடி ஏற்றவைத்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றுவதற்கு அவரது சாதியை காரணமாக காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இன்று ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்றவைத்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.


Next Story