திருப்பூர் பனியன் சந்தையில் பயங்கர தீ விபத்து - 50 கடைகள் எரிந்து சேதம்
திருப்பூர் பனியன் சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 கடைகள் ஏரிந்து நாசமாகியுள்ளன.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டையில் பனியன் சந்தை உள்ளது. இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பரவின.
இந்த தீ விபத்துள் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சிள் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. அதேவேளை தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிகள் சேதமடைந்ததுள்ளது.
Related Tags :
Next Story