ஓசூர் அடுத்த அய்யூர் வனப்பகுதியில் காட்டுத்தீ - அரிய வகை மரம், செடிகள் எரிந்து நாசம்


ஓசூர் அடுத்த அய்யூர் வனப்பகுதியில் காட்டுத்தீ - அரிய வகை மரம், செடிகள் எரிந்து நாசம்
x

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் மூங்கில் காடுகள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் அரிய வகை மரம், செடி, கொடிகள், காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள், காட்டு எருமைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளும் இந்த வனப்பகுதியில் உள்ளன.

இந்த வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக காட்டின் பல்வேறு பகுதிகளில் தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், அருகில் உள்ள கிராம மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்த தீயால் பல அரிய வகை மரங்களும், செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளன. காடுகளின் வழியாக செல்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை காட்டில் விட்டுச் செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story