பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தீ விபத்தில் இறந்த விரகாலூரை சேர்ந்த ராசாத்தி, அரண்மனைக்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். அதனை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story