செயிண்ட் கோபின் நிறுவன அதிகாரிகளுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்


செயிண்ட் கோபின் நிறுவன அதிகாரிகளுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:33 PM IST (Updated: 6 Oct 2023 12:37 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் செயிண்ட் கோபின் நிறுவன அதிகாரிகளுடன் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை,

பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபின் நிறுவன அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது செயிண்ட் கோபின் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் அவர் பேசியதாவது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த நிறுவனத்தின் புதிய கிளைகளை சமீபத்தில் திறந்து வைத்தேன். தற்போது இந்த நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஒரகடத்தில் தொடங்கவுள்ளது. செயிண்ட் கோபின் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூரில் நிறுவனத்தின் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இதன்மூலம் 1,150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இந்த முயற்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு இதுவே சான்று, என்று அவர் கூறினார்

1 More update

Next Story