சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் மின் கட்டணங்களை மாற்றியமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் மின் கட்டணங்களை மாற்றியமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 23 Sep 2023 10:13 AM GMT (Updated: 23 Sep 2023 11:24 AM GMT)

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவ கால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவைக் கொண்ட தாழ்வழுத்த ஆலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட மின்பளுவை குறைத்துக் கொள்ளவும் தேவைப்படும்போது உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படும்.

நூற்பாலைகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மின்கட்டண முறையை மாற்றியமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story