புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்


புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்
x

7 நாட்களுக்கு பிறகு புதுக்கோட்டை மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

புதுக்கோட்டை

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 30-ந் தேதி முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 நாட்களுக்கு பிறகு கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று (சனிக்கிழமை) கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றனர்.


Next Story