டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு புதிதாக ஐந்து உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆர்.சரவணகுமார், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story