கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் தடை விதிப்பு

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் தடை விதிப்பு
x

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் சாடிவயல் வனப்பகுதியில் கோவை குற்றால அருவி உள்ளது. வனப்பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலாத்தலம் உள்ளதால் இங்கு உள்ள இயற்கை அழகினையும் வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கவும் அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தருகிறார்கள். அருவியில் குளித்து மகிழ்ந்துவிட்டு வனப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்த நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story