கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
x

தஞ்சை கொள்ளிடம் ஆறு சுற்றுலாத்தலம் அல்ல, செல்பி எடுக்க முயன்று உயிரை இழக்க வேண்டாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தஞ்சாவூர்,

தஞ்சை கொள்ளிடம் ஆறு சுற்றுலாத்தலம் அல்ல என்றும் செல்பி எடுக்க முயன்று உயிரை இழக்க வேண்டாம் என்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய வீடுகளில் தண்ணீர் போகக்கூடிய சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான நிவாரண முகாம்கள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 4 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் போகக்கூடிய சூழ்நிலையில் பொதுமக்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

இதை சுற்றுலாத்தலமாகவோ, செல்பி எடுக்கும் இடமாகவோ பார்க்கக் கூடாது. இந்த சமயங்களில் வேடிக்கை பார்க்க தண்ணீரில் இறங்கி போவதால் விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நேரங்களில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, சுற்றுலாத்தலமாக சென்று செல்பி எடுக்கவோ வேண்டாமென்று மாவட்ட நிர்வாகம் மூலமாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார்.


Next Story