சமூக வலைத்தளத்தில் சர்ச்சை 'வீடியோ' பகிர்ந்த விவகாரம்: பா.ஜ.க. பெண் பிரமுகர் சவுதா மணி கைது


சமூக வலைத்தளத்தில் சர்ச்சை வீடியோ பகிர்ந்த விவகாரம்: பா.ஜ.க. பெண் பிரமுகர் சவுதா மணி கைது
x

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்ததாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க. செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சவுதாமணி. இவர் கடந்த ஜனவரி மாதம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் இரு மதத்தினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் அடையாளம் தெரியாத நபர் பேசிய வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து சவுதாமணி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மீது மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர், சென்னை ஐகோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சவுதாமணி மீது எப்போது வேண்டுமானாலும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சவுதாமணியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story