போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி
தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்
ஓமலூர்:-
ஓமலூர் அடுத்த மரக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கியில் சேலம் ராயல் கார்டன் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 57) என்பவர் மேலாளராக உள்ளார். இந்த வங்கியில் வைக்கப்பட்டுள்ள அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்த போது 3 பேர் போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.10 லட்சம் கடன் பெற்றது தெரியவந்தது. அதன்படி போலி நகைகளை வைத்து அடமானம் பெற்றதாக, மரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், ஈரோடு சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், சேலம் ெரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் ஆகியோர் மீது வங்கி மேலாளர் செல்வகுமார், தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story