அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - நீர்ப்பாசன ஆய்வாளர் மீது புகார்
போலி பணி ஆணை வழங்கியதாக ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் காசிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக நீர்ப்பாசன பிரிவு பணி ஆய்வாளர் மீது, ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் புகார் அளித்துள்ளார்.
நீர்ப்பாசன பிரிவு பணி ஆய்வாளர் பத்மநாபன், தன்னிடம் 1 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு தனது மகனுக்கு போலி பணி ஆணை வழங்கியதாக ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் காசிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாணியம்பாடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story