மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி; அ.தி.மு.க. பிரமுகர் கைது


மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி; அ.தி.மு.க. பிரமுகர் கைது
x

மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

அ.தி.மு.க. பிரமுகர்

சென்னை தரமணி எம்.ஜி. நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 57). இவரது கணவர் சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தநிலையில், கடந்த 2015-ம் ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய ஓய்வூதிய மொத்த பணம் பரமேஸ்வரிக்கு கிடைத்தது.

இதையறிந்த கணவரின் நண்பரும், அ.தி.மு.க. பிரமுகருமான சேகர் என்ற குணசேகரன் (70) என்பவர் பரமேஸ்வரியிடம் தனக்கு மின்வாரியத்தில் அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும், ஆகையால் மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை பரமேஸ்வரியிடம் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது.

மோசடி வழக்கில் கைது

ஆனால் அரசு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் கடந்த 8 ஆண்டுகளாக குணசேகரன் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பணத்தை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி மோசடி குறித்து தரமணி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து தரமணி போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் குணசேகரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story