3,726 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


3,726 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
x

3,726 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமை தாங்கினார். சிவக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு செஞ்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 29 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 3,726 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. எனவே மாணவர்கள் தீய பழக்கத்திற்கு ஆளாகாமல் நற்சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளிவாசலில் பணிபுரியும் உலமாக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானிய தொகைக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரகுபதி, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றியக்குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, பச்சையப்பன், இளம்வழுதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் சுப்பராயன் நன்றி கூறினார்.



Next Story