ஆந்திராவில் முழு அடைப்பு: வெறிச்சோடிய பள்ளிப்பட்டு பஸ் நிலையம்


ஆந்திராவில் முழு அடைப்பு: வெறிச்சோடிய பள்ளிப்பட்டு பஸ் நிலையம்
x

பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் ஆந்திர பஸ்கள் நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை தொடங்குகிறது. இதனால் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த அரசு பஸ்களும், தனியார் பஸ்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசு பஸ்கள் இங்கு அதிக அளவில் இயங்குகின்றன. குறிப்பாக பெங்களூரு, சித்தூர், புத்தூர், திருப்பதி, மதனபள்ளி, பலமநேர், குப்பம், கோலார் ஆகிய பகுதிகளுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசு பஸ்கள் அதிக அளவில் இயங்குகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் நேற்று முழுவதும் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டங்கள், போக்குவரத்து தடை ஆகியவற்றை அறிவித்தனர். இதனால் நேற்று காலை முதல் பள்ளிப்பட்டு பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய ஆந்திர மாநில அரசு பஸ்கள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் இங்கிருந்து இயங்கவில்லை. இதனால் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் ஆந்திர பஸ்கள் நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.


Next Story