விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம்


விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம்
x

விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கரூர்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வேலாயுதம்பாளையம் கடைவீதி பகுதிகளில் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதுகுறித்து ேவலாயுதம்பாளையம் கடைவீதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறுகையில், சிலைகள் யாவும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு களிமண் மற்றும் கிழங்குமாவு கொண்டு சுமார் 3 அடி முதல் 15 அடி வரை தயாரிக்கப்படுகிறது. மேலும், சிங்கம்,யானை, மயில், கருடன் போன்ற பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இந்தாண்டு புதிய வரவாக ஜல்லிக்கட்டில் வீரர் மாட்டை அடக்குவது போன்ற தோற்றத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது. விநாயகர் சிலைகள் உயரத்திற்கு ஏற்றவாறு ரூ.50 முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். என்றார்.


Next Story