டீக்கடை உரிமையாளரை திரிபுரா போலீஸ் என கூறி கடத்தி சென்று பணம் பறித்த கும்பல் - 3 பேர் கைது

டீக்கடை உரிமையாளரை திரிபுரா போலீஸ் என கூறி கடத்தி சென்று பணம் பறித்த கும்பல் - 3 பேர் கைது
x

தாம்பரம் அருகே தேநீர் கடை உரிமையாளர் ஒருவரை திரிபுரா மாநில போலீசார் என கூறி கடத்தி சென்று பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம்,

தாம்பரம் அருகே தேநீர் கடை உரிமையாளர் ஒருவரை திரிபுரா மாநில போலீசார் என கூறி கடத்தி சென்று பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் அன்வர் உசேன். இவர் தாம்பரத்தில் தேநீர் கடை நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி அன்வர் உசேனின் கடைக்கு வந்த மர்மநபர்கள் சிலர் தங்களை திரிபுரா போலீசார் எனவும், விசாரணை என கூறி காரில் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரின் கண்ணை துணியால் கட்டி கடத்தி சென்ற அவர்கள் 5 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அன்வர் உசேன் தன்னுடைய வங்கி கணக்கில் 90 ஆயிரம் தான் உள்ளது என கூறி அப்பணத்தை கொடுத்த பின் அவரை காரில் இருந்து இறக்கிவிட்டனர். உடனே, இந்த சம்பவம் குறித்து அன்வர் உசேன் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் சாலையில் இருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, சந்தேகமளிக்கும் வகையில் சென்ற கார் ஒன்றின் எண்ணை குறித்து கொண்ட போலீசார், அதனடிப்படையில் அல்காஸ்மியா, ஜலீல்மியா மற்றும் பெர்பேஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், மூவரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், மூவரை கைது செய்ய திரிபுரா மாநிலத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.

Next Story