கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து 'வாட்ஸ்-அப்' மூலம் புகார் தெரிவிக்கலாம்


கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் வழியாக வெளிமாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பஸ், ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வருபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

'வாட்ஸ்-அப்'பில் புகார்

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை செய்தால், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் மாணவர்களுக்கு யாரேனும் கஞ்சா, போதைப்பொருட்களை விற்பனை செய்தால் அவர்களை பற்றிய தகவல்களை உடனடியாக 94981 11103 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் தகவல் தெரிவிக்கும்படியும், அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story