#லைவ் அப்டேட்ஸ்: பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு வெற்றியா...! தோல்வியா...! - முழு விவரம்


தினத்தந்தி 23 Jun 2022 1:21 AM GMT (Updated: 23 Jun 2022 3:19 PM GMT)

பரபரப்பான சூழலில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவுபெற்றது.


Live Updates

  • 23 Jun 2022 8:03 AM GMT


    அதிமுகவின் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை பொதுக் குழுவில் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக் குழு உறுப்பினர்கள் பலரும் பூங்கொத்துகளையும், மலர்மாலைகளையும் அறிவித்து தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளிக் கிரீடமும், வீரவாளும் வழங்கப்பட்டது.

  • 23 Jun 2022 7:41 AM GMT


    ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டும் திட்டம் இல்லை; பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் தனிமைப்படுத்திக் கொள்ள நேரிடும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

  • 23 Jun 2022 7:36 AM GMT


    ஜூலை 11ல் நடைபெற உள்ள அடுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

  • 23 Jun 2022 7:07 AM GMT

    பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவுபெற்றது.

    எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது

    இரட்டை தலைமையை ரத்து செய்து, வலுவான ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 23 Jun 2022 7:06 AM GMT



  • 23 Jun 2022 7:05 AM GMT



  • 23 Jun 2022 6:46 AM GMT



  • 23 Jun 2022 6:46 AM GMT



  • 23 Jun 2022 6:45 AM GMT




Next Story