கோவையில் ராட்சத பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் கைது
கோவையில் ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரம் ராட்சத விளம்பர பலகை இன்று திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலத்த காற்று வீசியதால் விளம்பர பலகை கட்டும் பணியின் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விளம்பர பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து ஒப்பந்ததார் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், விளம்பர பேனர் அமைக்கும் ஒப்பந்ததாரர் பழனிச்சாமி கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story