'பிங்க்' நிற பஸ்சில் பச்சை நிற பெயர் பலகை.. கண்டக்டர் டிக்கெட் கேட்பதால் பெண்கள் அதிர்ச்சி


பிங்க் நிற பஸ்சில் பச்சை நிற பெயர் பலகை.. கண்டக்டர் டிக்கெட் கேட்பதால் பெண்கள் அதிர்ச்சி
x

‘பிங்க்’ நிற வர்ணம் பூசப்பட்ட சில மாநகர பஸ்களில், பச்சை நிற பெயர் பலகை பொருத்தி வருவதாக தெரிகிறது. ‘பிங்க்’ நிறத்தை பார்த்து இலவசம் என நினைத்து பஸ்சில் ஏறும் பெண்களிடம், கண்டக்டர்கள் டிக்கெட் கேட்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

சென்னை

மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மூதாட்டிகள் மாநகர பஸ்சில் இலவசமாக சென்று வந்தனர். சில நேரங்களில் இலவசம் என நினைத்து வெள்ளை நிற பெயர் பலகை போட்ட பஸ்சில் ஏறுவதற்கு பதிலாக பச்சை நிற பெயர் பலகை போட்ட பஸ்சில் பெண்கள், மூதாட்டிகள் ஏறிவிடுவதால் கண்டக்டர் டிக்கெட் கேட்கும்போது தகராறில் ஈபடும் சம்பவங்களும் அரங்கேறின.

எனவே பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்சை அடையாளம் காட்டுவதற்காக மாநகர வெள்ளை நிற பெயர் பலகை போட்டு வரும் பஸ்சின் முன்பக்கமும், பின்பக்கமும் 'பிங்க்' நிற வர்ணம் அடிக்கப்பட்டது. அத்துடன் பஸ்சின் முன்பகுதியில் பெண்களுக்கு கட்டணமில்லை என 'ஸ்டிக்கரும்' ஒட்டப்பட்டது.

இந்தநிலையில் 'பிங்க்' நிற வர்ணம் பூசப்பட்ட சில மாநகர பஸ்களில், பச்சை நிற பெயர் பலகை பொருத்தி வருவதாக தெரிகிறது. இதனால் 'பிங்க்' நிறத்தை பார்த்து இலவசம் என நினைத்து பஸ்சில் ஏறும் பெண்களிடம், கண்டக்டர்கள் டிக்கெட் கேட்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றனர். சில நேரங்களில் கண்டக்டர்களுடன் வாக்குவாதமும் செய்கின்றனர். டிக்கெட் எடுக்க மறுக்கும் பெண்களை பாதி வழியில் இறக்கி விடப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். அவசரமாகச் செல்லும் பெண்கள், வேறு வழியின்றி டிக்கெட் வாங்கி செல்கின்றனர்.


Next Story