இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 3 பயணிகளிடம் தங்கம் பறிமுதல்


இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 3 பயணிகளிடம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 May 2022 12:34 AM IST (Updated: 29 May 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

கொழும்புவில் இருந்து 3 பயணிகள் ரகசியமாக தங்கத்தை மறைத்து எடுத்து வந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சென்னை,

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை வந்திறங்கிய பயணிகளிடம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது 3 பயணிகள் ரகசியமாக தங்கத்தை மறைத்து எடுத்து வந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த பயணிகள் தங்கள் உள்ளாடைகளில் தங்கக் கட்டி (24 காரட்), தங்கச் சங்கிலி (22 காரட்), தங்க நகைகள் (24 காரட்) ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்த 1.6 கிலோ எடை கொண்ட தங்கத்தை அவர்கள் கடத்தி வந்துள்ளனர்.Gold confiscated from passengers arriving at Chennai Airport from Sri Lanka

இதையடுத்து பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.72.4 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கம் கடத்தி வந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story