தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?


தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
x

கோப்புப்படம் 

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரித்த நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரித்த நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ. 53,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ரூ.6,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.94.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 More update

Next Story