சென்னை விமான நிலையத்தில் சோதனை: ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் சோதனை: ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x

வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு, பெங்களூருவில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து, பெங்களூருவில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 2 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் சோதனை செய்தபோது ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள், மேலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story