அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
x

கோப்புப்படம்

6 நாட்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 151 பேர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காண்பித்துள்ளனர்.

சென்னை,

தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

விண்ணப்ப பதிவு தொடங்கிய 6 நாட்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 151 பேர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காண்பித்துள்ளனர். இவர்களில், 89 ஆயிரத்து 637 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மே.20-ந்தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்ப பதிவு தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால், 044-24343106, 044-24342911 என்ற எண்ணுக்கோ அல்லது tngasa24@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கோ மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


Next Story